கோடி சூரியர்களின் ஒளியை கொண்ட ஜனகனின் மகளே மஹாலக்ஷ்மி!
சீக்கிரம் வாம்மா! தங்க மழை பெய்தவாறே வாராய்! எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவாய்! நோய்களை போக்குவாய்! வறுமைகளை அகற்றுவாய்!
பகைமையை விலக்கி அன்பை பெறுக செய்வாய்! தாயாரம்மா தாயாரம்மா!!
படித்தன்! ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
ஜனகனின் மகளே…….
பல்லவி
ஜனகனின் மகளே ஜானகி தேவியே
எனக்கருள் புரிவாயே உனை துதித்தேனே
அனுபல்லவி
தினகரகுலத்தோன் ரகுராமன் நாயகியே
வனமாலி கேசவன் மணிமார்பிலுறைபவளே
சரணம்
ஒரு கோடி சூரியனின் ஒளியையும் மிஞ்சும்
திருமகளே கனக மழை பொழிபவளே
வறுமை பவநோய் பகைகளை விலக்கி
திருவுடன் வாழ்ந்திடும் வழி செய்வாய் தாயே
No comments:
Post a Comment