காமாக்ஷி தேவி……
பல்லவி
காமாக்ஷி தேவி உனையே துதித்தேன்
பூமியில் உனையன்றி வேறு யாரென் துணை
துரிதம்
பாமரர் பண்டிதர் தேவர்கள் முனிவர்கள்
காமன் பிரமனிந்திரன் வணங்கிடும்
அனுபல்லவி
சாம கானம் தனை விரும்பி ரசிப்பவளே
மாமரத்தின் கீழ் நின்று தவம் புரிந்தவளே
சரணம்
பூமகள் நாமகள் நேசிக்கும் மலைமகளே
தாமரை மலரேந்தும் மலர்க்கரத்தாளே
தாமரை நாபன் கேசவன் சோதரியே
தூமலர் தூவியுன் பாதம் பணிந்தேன்
No comments:
Post a Comment