வானோர் பணிந்தேத்தும்……
பல்லவி
வானோர் பணிந்தேத்தும் தாயே மீனாக்ஷி
ஞானமளித்தெனையே ஆண்டருள்வாயே
அனுபல்லவி
தேனார்மொழியாளே கேசவன் சோதரியே
கூனல் பிறையணிந்த சிவபெருமான் நாயகியே
சரணம்
கானுறை முனிவரும் மூவரும் துதித்திடும்
மீனைப் பழிக்கும் விழியுடைய சுந்தரியே
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கிடவே
நானுனைத் துதித்தேன் அங்கயற்கண்ணியே
No comments:
Post a Comment