நாமங்களோதியே….
பல்லவி
நாமங்களோதியே நற்கதி பெறுவோம்
தாமதமின்றியே அடியார்களனைவரும்
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவன் மாதவன்
தாமோதரன் மதுசூதனனவனது
சரணம்
காமக்ரோதாதி அறுபகை நீங்கிடவும்
நாமெனுமகந்தை அழிதொழிந்திடவும்
ஓமெனும் மந்திரப் பொருள் விளங்கிடவும்
பூமியில் நம்மாழ்வார் செய்தது போலவே
No comments:
Post a Comment