கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
அதிகாலைவேளை…..
பல்லவி
அதிகாலை வேளை மாதவனே கேசவனே
துதித்தோமுன் தங்கத் தாமரைப் பாதங்களை
அனுபல்லவி
புதிதாக நீ தரும் பொருள்களுக்கென்றில்லாமல்
மதி முகத்தோன் நீயே ஏழ்பிறப்பும் எங்கள் துணை
சரணம்
கதிநீயே யது குலத்து நாயகனே கண்ணா
மதித்து நாம் செய்யும் கிரிசைகளை ஏற்று
எதிர் காலம் தனிலும் எம் குலத்திலுதித்து
பதியாக நின்றெம்மைக் காத்தருள வேண்டும்
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை(க்) கொள்ளாமல் போகாது
இற்றை(ப்) பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment