வேங்கடவனைனையே…….
பல்லவி
வேங்கடவனுனையே பாங்குடனே துதித்தேன்
ஓங்கு புகழ் திருமலையிலெழுந்தருளிக்காட்சி தரும்
துரிதம்
சாரங்கம்,சங்கு,கதை,கை வாளுடனே
பாரெங்கும் புகழ் விளங்க அருளாட்சி செய்யும்
அனுபல்லவி
நீங்காத செல்வம் தரும் அலமேலு மங்கைதனை
தாங்கி நிற்கும் திருமார்பா மாதவனே கேசவனே
சரணம்
ஓங்கி உலகளந்த உத்தமனே கடல் வண்ணா
ரீங்கரமிசைக்கும் வண்டுகள் பல சூழ்ந்த
பூங்காவனம் நிறைந்த சோலைகளின் நடுவே
தீங்கின்றி நின்றருளும் திருமாலே கோவிந்தா
No comments:
Post a Comment