வடமதுரை மைந்தனை…
பல்லவி
வடமதுரை மைந்தனை வாசுதேவனை
இடைக்குலச்சிறுவனைக் கேசவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
கடல் நடுவே கிடந்துறங்கும் அனந்தசயனனை
இடர் பிணி பவபயம் நீக்கிட வேண்டியே
சரணம்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வயிறு கலக்கிய நீலவண்ணக் கண்ணனை
படமெடுத்த பாம்பின் மேல் நடம்புரிந்த பாலனை
கடை கயிற்றால் கட்டுண்ட தாமோதரனை
No comments:
Post a Comment