#ஸூர்யனைக்கண்டவுடன் விகஸித்து மலரும் செக்கச் சிவந்த பத்மத்திற்கு ஒப்பான உன் வதன கமலம் ஏன் சற்றே நாணி குறும் சிரிப்புடன் நிலம் நோக்கி தாழ்ந்துள்ளது
அரங்கன் முன்னிரவில் உன் செவ்விதழ்களில் பதித்த முத்திரையை நினைந்தா?
அல்லது முக்கனிகளை தேனில் நனைத்து உன் இதழ்களுக்கு அமுதூட்டப் போகும் இன்றைய விருந்தினை நினைந்தா?
ஜாக்கிரதை யடி கோதாய்!!!
மாயக் கண்ணனடி இவன்
நீ அசந்த நேரத்தில் கோபியர்களுடன் குலாவச் சென்று விடுவான்
மாயக்கண்ணனிவன்……
பல்லவி
மாயக்கண்ணனிவன் மறந்து விடாதே
ஆயர்குல கோபியரைக் கண்டவுடன் சென்றிடுவான்
அனுபல்லவி
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
நோயெனும் பசலை தரக் காத்திருக்கும் கேசவன்
சரணம்
பாயுமொளி தரும் கதிரவனைக்கண்டு
தீயெனச்சிவந்ததோ கமலமெனுமுன் வதனம்
நேயமுடனரங்கன் வாயில் தந்த முத்திரையோ
தாயே கோதை நீ விழிப்புடனே இருந்திடுவாய்
No comments:
Post a Comment