ஓயாதுன் புகழ்…..
பல்லவி
ஓயாதுன் புகழ் பாடும் எனக்கருள வருவாய்
தேயாத புகழ் மேவும் தில்லை சிதம்பரனே
அனுபல்லவி
மாயன் கேசவனின் மனம் மகிழ் நேசனே
தூயோனே துயரிடர் களைந்திடுமீசனே
சரணம்
நேயமுடன் பணிந்திடுமடியார்க்கருள்பவனே
சேயென எனைக்காக்கும் நமச்சிவாயனே
தாயுமானவனே தயாபரனே சிவனே
நாயிற்கடையேனெனையாளும் நடராசனே
No comments:
Post a Comment