பாடல் பல நூறு……
பல்லவி
பாடல் பல நூறு நான் பாட வேண்டும்
ஆடவல்லானே உனைப்போற்றி நானும்
அனுபல்லவி
தேடலில் தோற்றாருன் அடிமுடிகாணால்
சேடன் மீதுறங்கும் கேசவனும் பிரமனும்
சரணம்
மாடுதனை வாகனமாய்க் கொண்ட சிவனே
தோடுடைய செவியனே சுடலை மாடனே
நாடித்துதிப்பவர்க்கு நல்லருள் புரிபவனே
கூடல் மாநகர் வளர் சொக்கநாதனே
No comments:
Post a Comment