ஆனந்தமளித்திடும்……
பல்லவி
ஆனந்தமளித்திடும் ஆண்டவனைத் துதித்தேன்
தேனவன் திருநாமம் தினமும் உரைத்தேன்
அனுபல்லவி
வானளந்து விண்ணளந்து மூவுலகுமளந்த
கோனந்தக் கேசவன் அவன் புகழ் பாடியே
சரணம்
தானென்னும் அகங்காரம் விட்டொழிக்க முயன்றேன்
ஈனமான விஷயசுகம் களைந்து
தானமும் தவமும் நன்னெறி அறிவும்
ஞானமும் பக்தியும் நானென்றும் பெறவே
No comments:
Post a Comment