Tuesday, 10 January 2023

நாடி வந்து நாமெல்லாம்……

 

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"


  


                                 நாடி வந்து நாமெல்லாம்……



                                           பல்லவி


                         நாடி வந்து நாமெல்லாம்  கேசவன் புகழினையே

                         பாடிப்பரவசித்து பரிசுகளைப் பெற்று


                                      அனுபல்லவி


                         கோடி உடுத்தி செவிகளில் தோடணிந்து

                         பாடகமும் பலவித அணிமணியும் புனைந்து


                                           சரணம்


                         ஆடிக்களித்து அகமகிழ்ந்து கொண்டாடி

                         ஈடிணையில்லாத கோவிந்தனவனுடனே

                         மூட நெய் பெய்து இனிப்பான அமுதுண்டு

                         கூடியனைவருமே குளிர்ந்திடுவோமெம்பாவாய்

                         

No comments:

Post a Comment