எனக்கருளக் காத்திருக்கும்…….
பல்லவி
எனக்கருளக் காத்திருக்கும் காமாக்ஷியுனைப்பணிந்தேன்
தனக்குவமை இல்லாத தனிப்பெருந்தேவி
துரிதம்
சனகாதி முனிர்கள் நரர் சுரரிந்திரன்
அனைவரும் வணங்கிடும் திரிபுரசுந்தரி
அனுபல்லவி
மனதிற்கினிய கேசவன் சோதரி
அனங்கனுக்கருளிய சிவகாமேச்வரி
சரணம்
கனக சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே
அனலேந்தும் நெற்றிக்கண்ணன் நாயகியே
வனவிலங்கெனத்திரியும் எனது புலன்களை
இனிதடக்கிடவே நீயருள் புரிவாய்
No comments:
Post a Comment