திருவரங்கன்……
பல்லவி
திருவரங்கன் திருக்கோலம் கண்டு மனம் நெகிழ்ந்தேன்
திருவரங்க நாயகி மனம் மகிழ காட்சி தரும்
துரிதம்
கருடன் அனுமன் சுரபதி நரர் சுரர்
பிரமன் சுகசனகாதியர் வணங்கிடும்
அனுபல்லவி
கருநிறவண்ணன் அருள் தரும் கேசவன்
திருப்பாற்கடல் நீங்கி திருவரங்கம் தனிலுறங்கும்
சரணம்
திருமகளைத் திருமார்பில் நீங்காது வைத்திருக்கும்
அருமா கடலமுதன் அரங்க நகர் நாயகன்
தரும நெறி காக்க தரணியிலவதரித்த
பெருமைக்குரியவன் பேரருளாளன்
No comments:
Post a Comment