கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே... !!!
பையுடைய நாகத்தின்….
பல்லவி
பையுடைய நாகத்தின் வைரியாய் விளங்கும்
கருடக்கொடியுடைய மாலனுக்குப் பல்லாண்டு
அனுபல்லவி
தையல் திருமகளைத் திருமார்பில் வைத்திருக்கும்
ஐயன் பேரருளாளன் கேசவற்குப் பல்லாண்டு
சரணம்
நெய்யுடன் கூடிய நல்ல சோறும்
கையுடன் சேவகன் தரும் தாம்பூலமும்
மெய்யுடம்பில் பூச நல் சந்தனக் குழம்பும்
காதுக்கும் கழுத்துக்குமணிகலனும் தரும்
நெய்ச்சோறு, சேவகருடன் கூடிய அரச போகம், வெற்றிலை-பாக்கு, கழுத்துக்குப் பூண்-அணி, காதுக்குக் குண்டலம், மார்புக்குச் சந்தனம், - என்னை வெள்ளை உயிராக வளர்த்துவரும், நாகத்தின் பகையாகிய கருடனைக் கொடியாகக் கொண்டவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.
.
No comments:
Post a Comment