ஶ்ரீ ராமனைப் பாடி….
பல்லவி
ஶ்ரீ ராமனைப்பாடிப் பரவசித்த அந்த
தியாகராஜனின் திருவடியைப் பணிந்தேன்
அனுபல்லவி
ஓராயிரம் நாமமுடைய கேசவனின்
ஶ்ரீ ராம நாமமே சிறந்ததென எண்ணி
சரணம்
காரார் குழலாள் ஜானகியின் கரம் பிடித்த
பேராளனை அழகன் ஜானகி ராமனை
பாரோர் புகழ்ந்தேத்தும் பட்டாபிராமனை
பாராட்டிப் பாடல் பல பக்தியுடன் புனைந்து
No comments:
Post a Comment