அழகன் அரங்கனையே…..
பல்லவி
அழகன் அரங்கனையே ஆசையுடன் தினம் துதித்தேன்
கழலடி நிழல் பெறவே அவனருளை யாசித்தேன்
அனுபல்லவி
சுழலும் சக்கரமும் சங்கும் கையிலேந்தும்
குழலோனவன் வடிவே மனதில் தினம் வைத்தேன்
சரணம்
அலைமேல் துயில்பவனை பெண்ணுருவமெடுத்தவனை
மலையை குடையாக்கி மழையைத் தடுத்தவனை
அலைமகளைத் திருமார்பில் வைத்திருக்கும் கேசவனை
சிலையாய் பாம்பணை மேல் கிடந்துறங்கும் திருமாலை
No comments:
Post a Comment