தங்கமயிலேறிடும்……
பல்லவி
தங்கமயிலேறிடும் சிங்காரவேலனை
அங்கம் புழுதிபட சேவித்துத் துதித்தேன்
அனுபல்லவி
சங்கரன் சங்கரி கொஞ்சிடும் குமரனை
பங்கயநாபன் கேசவன் மருகனை
சரணம்
சிங்கமுகாசுரனையும் சூரபதுமனையும்
வெங்குருதி கொப்பளிக்க வீழ்த்திய முருகனை
நங்கையர் வள்ளி தேவானையை மணந்தவனை
மங்காத புகழ் மேவும் செந்தில் நாதனை
No comments:
Post a Comment