அறுவிரல் கொண்ட…..
பல்லவி
அறுவிரல் கொண்ட மகாலக்ஷ்மியின்
திருவருள் பெறவே மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
மறுபிறவி இல்லாத வரம் பெற வேண்டியும்
அறுபகை நீங்கி நல்வாழ்வு பெறவும்
சரணம்
உறுதிப் பொருள் பெற உதவிடும் திருமால்
குறுங்குடி நம்பி கேசவன் நாயகி
குறுநகை தவழும் புன்னகை முகத்தாள்
நறுமணம் கமழும் கருங்கூந்தலுடையாள்
ஆறுவிரல் மஹாலக்ஷமி
அரசர் கோவில்
இந்த கோவிலில் அதிசயம் என்னவென்றால் இங்கே ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருள்பாலிக்கிறார். குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான ஸ்தலம் பெருமாள் கமல வரதராஜப் பெருமாள். தாயார் சுந்தரமஹாலக்ஷ்மி அதி சுந்தர ரூபவதி. குபேர சம்பத் சக்தி. வாரி வழங்குபவள். சிறு குழந்தை போல ' புசு புசு' கன்னம். சிரித்த முகம். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி தரும் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். சுக்ரன் ஆறு எனும் எண் சம்பந்தப்பட்டவர். அவரை தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் சக்தி கொண்டவள் . ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருள்பாலிக்கிறார். குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான ஸ்தலம் பெருமாள் கமல வரதராஜப் பெருமாள்.
இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.
செல்வங்களை வேண்டியவர்க்கு வாரி வழங்குபவள் மஹாலக்ஷ்மி. மொத்தமாக 64 லட்சுமிகள் உண்டு. அவர்கள் அனைவரிலும் பிரதானமானவள் தாயார் சுந்தர மகாலட்சுமி. ஆதி மூல லட்சுமி . பெயருக்கேற்றபடி சுந்தரமஹாலக்ஷ்மி அதி சுந்தர ரூபவதி. குபேர சம்பத் சக்தி. வாரி வழங்குபவள். சிறு குழந்தை போல ' புசு புசு' கன்னம். சிரித்த முகம். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி தரும் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். சுக்ரன் ஆறு எனும் எண் சம்பந்தப்பட்டவர். அவரை தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் சக்தி கொண்டவள் இந்த தாயார்.
ஒருவன் நன்றாக சுபிக்ஷமாக இருந்தால் ''அவனுக்கு என்னப்பா சுக்ர தசை. கொழிக்கிறான்'' என்கிறோம். இங்கே மஹாலக்ஷ்மி சுக்ரனையே தனது வசம் கொண்டு தன ஆகர்ஷண லக்ஷ்மியாக அருள் பாலிக்கிறாள். பிரதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் இங்கே வந்து தாயாரை வழிபடுகிறார். பெருமாள் ‘கமல’ வரதராஜ பெருமாள். இவரை காஞ்சி வரதருக்கும் மூத்தவர், அண்ணா, என்பார்கள் .
ஒரு கதை. பிரம்மா பாப விமோசனம் தேடும்போது நிறைய ரிஷிகளை, முனிவர்களை கேட்கிறார். ராஜாவும், விஷ்ணுவும் சேர்ந்து இருக்கும் ஒரு க்ஷேத்திரத்துக்கு சென்று தரிசித்தால் பாப விமோச்சனம் நிச்சயம்'' என அவர்கள் சொல்ல இங்கே வருகிறார். நாராயணன் பாலாற்றங்கரையில் இங்கே வாசம் செயகிறார். ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். இருவரும் இங்கே இருப்பதை அறிந்து தரிசித்து ப்ரம்மா, பாப விமோசனம் பெறுகிறார். அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயர்.
ஜனக மஹாராஜா முதலில்கட்டிய கோவில் எனவே இதற்கு அரசர் கோவில் என்று பெயர் வந்தது என்கிறார்கள்.
தாயார் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. பாற்கடலில் உருவானவள் பாலாற்றை பார்த்தபடியிருக்கிறாள். அழகிய கல் மண்டபம் .காதுகளில் பத்தி, குண்டங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகள் .
மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ‘சுந்தர’மாக ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்க ளையும் கொடுப்பாள் மகாலட்சுமி. தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.
தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.
அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள்.
பெருமாள் கமல வரதராஜர் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்ததால் ‘கமல’ வரதராஜர். பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர்கள்.. கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவர்.
''இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் வர முடியாது. தாயார் அனுக்கிரஹம் இருந்து அழைத்தால் தான் வர முடியும்.
No comments:
Post a Comment