3786. The gods and sages went to the lord
shining as a bright light and praised him, saying,
"Give us your grace and remove our troubles!"
and he removed their troubles.
O devotees, come,
our god sleeps on the snake bed in Thirmogur.
Let us go there and worship him
and our troubles will go away. Thirumogur Aapthan.
3786.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
படர்கொள் பாம்பணைமேல்…..
பல்லவி
படர்கொள் பாம்பணைமேல் பள்ளிகொண்ட திருமாலே
இடர்கெட எனக்கருள வேண்டுமென உனைத்துதித்தேன்
அனுபல்லவி
விடமுண்ட கண்டனும் பிரமனும் பணிந்தேத்தும்
நெடுமாலே மாதவனே திருமோகூராப்தனே
சரணம்
அடங்காத அரவென்னும் காளிங்கன் தலைமீது
நடம் புரிந்து அதன் கர்வம் தீர்த்தவனே கேசவனே
சுடரென சோதியாய் விளங்கும் பரம்பொருளே
புடமிட்ட பொன்னே ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment