சங்கரனை…….
பல்லவி
சங்கரனை சாம்பசதாசிவனை
அங்கமில் மதனின் வைரியைப் பணிந்தேன்
துரிதம்
நந்தி நான்முகன் பூதகணங்கள்
இந்திரனமரரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
திங்கள் பிறையும் கங்கையுமணிந்தவனை
பங்கயநாபன் கேசவன் நேசனை
சரணம்
பொங்கரவணிந்தவனை மங்கை பங்கனை
செங்கையில் மான் மழுவேந்திய சிவனை
சங்காபிஷேகம்தனில் மனம் மகிழுமீசனை
அங்கயற்கண்ணி பார்வதி நாயகனை
No comments:
Post a Comment