தினமுனைத் துதித்தேன்……
பல்லவி
தினமுனைத் துதித்தேன் கண்ணபிரானே
எனக்கருள உனக்கேன் இன்னும் தயக்கம்
அனுபல்லவி
வனமாலை துளபம் கௌஸ்துபமணிந்தவனே
கனகமகாலக்ஷ்மியை மார்பில் வைத்திருப்பவனே
சரணம்
அனங்கனைப் படைத்த மாதவனே கேசவனே
சனகாதி முனிவர்களும் நாரதரும் நான்முகனும்
வினதையின் புதல்வன் கருடனுமிந்திரனும்
அனவரதம் வணங்கும் நாராயணனே
No comments:
Post a Comment