Tuesday, 31 January 2023

தண்டனிட்டுப் பணிந்தேன்……

திருக்கண்டேன் = மஹா லக்ஷ்மியை கண்டேன்
பொன்மேனி கண்டேன் = பொன் போல் ஜொலிக்கும் மேனியை கண்டேன்
திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன் = திகழும் + அருக்கன் + நிறமும் + கண்டேன் = சூரியனைப் போல் ஒளி விடும் நிறத்தைப் பார்த்தேன்
செருக்கிளரும் = செரு என்றால் போர், யுத்தம். யுத்தத்திற்கு கிளர்ந்து வரும்
பொன்னாழி கண்டேன் = சக்ராயுதம் கண்டேன்
புரிசங்கங் கைக்கண்டேன் = கையில் சங்கு இருப்பதை கண்டேன்
என்னாழி வண்ணன்பா லின் = கடல் வண்ணமாய் இருக்கும் அவனிடத்தில்
பார்க்காமலா இத்தனை முறை கண்டேன் கண்டேன் என்று சொல்லி இருப்பார் ?
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்பா லின்

                              தண்டனிட்டுப் பணிந்தேன்…… 

                                        பல்லவி

                         தண்டனிட்டுப் பணிந்தேன் தாமரை நாபனை
                         அண்டசராசரமனைத்தையும் காப்பவனை

                                     அனுபல்லவி

                         புண்டரீகாக்ஷனை பூலோகம் போற்றும்
                         கண்ணனை ஶ்ரீமன் நாராயணனை

                                          சரணம்

                         கண்டேன் திருமகளைப்பொன்மேனியின் மார்பில்
                         கண்டேன் அம்மேனியில்  கதிரவனின் ஒளியை
                         கண்டேன் புரிசங்கம் பொன்னாழி கரந்தன்னில்
                         கண்டேன் மனக்கண்ணில் கடல் வண்ணன் கேசவனை

No comments:

Post a Comment