முருகன் பெயர் சொல்லி…..
பல்லவி
முருகன் பெயரைச்சொல்லி அவனை துதிப்போர்க்கு
அருகிலவன் வருவான் குமரன் அருளைப் பொழிந்திடுவான்
அனுபல்லவி
கருமாமுகில்வண்ணன் கேசவன் மருகன்
பெருமைக்குரிய ஈசன் சிவன் மகன்
சரணம்
குருவாய் சிவனுக்கு மந்திரப் பொருள் சொன்ன
அறுமகன் சரவணன் முத்துக்குமரன்
குறமகள் வள்ளியின் கரம் பிடித்த குகன்
இருவினைப் பயன் நீக்கும் சிங்காரவேலன்
No comments:
Post a Comment