ஆயிரம் நாமம் சொல்லி……
பல்லவி
ஆயிரம் நாமம் சொல்லி உன்னை அழைத்தேனே
காயாம்பூ வண்ணனே கேசவனே எனக்கருள்வாய்
அனுபல்லவி
ஞாயிறும் திங்களும் கண்காளாயுடையவனே
பாயிரம் பல கொண்டவனே பரமபதநாதனே
சரணம்
ஆயர் குலத்துதித்த மாயக் கண்ணனே
நேயமுடன் கோபியர் கொண்டாடும் கிரிதரனே
வேயர் புகழ் கோதை விரும்பிய அரங்கனே
தாயெனவே உனை நினைந்து தாள் பணிந்தேனே
No comments:
Post a Comment