Saturday, 21 January 2023

அலமேலுமங்கையை…….

समस्तजननीं वन्दे चैतन्यस्तन्यदायिनीम् ।
श्रेयसीं श्रीनिवासस्य करुणामिव रूपिणीम् ॥
. ஸ்ரீபத்மாவதி தாயார் திருவடிகளே சரணம்.....!!!

ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதந்ய ஸ்தந்ய தாயிநீம் |
ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம் ||

தனது லீலையான கடாக்ஷத்தாலேயே நன்றாகச் எல்லாருக்கும் தாயாக அறிவை என்றும் கொடுப்பவளும் (தன்னை ஸ்திரமாக வைத்துக்கொண்டிருக்கும் திருவேங்கடமுடையானுக்கு) மேன்மையை அளிப்பவளும் திருவேங்கடமுடையானுடைய உருவெடுத்த கருணை போலும் இருக்கிற மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

தயா தேவியே ஞானப் பாலூட்டி பேணி அருளுகிறாள் –
இதில் ஸ்ரீ தேவியையும்
அடுத்த இரண்டு ஸ்லோகங்களாலும் ஸ்ரீ பூமா நீளா தேவிகளை வணங்குகிறார்-
ஸ்ரேயசீம் ஸ்ரீ நிவாசஸஸ்ய–என்பதால்
ஸ்ரீ நிவாசனுடைய மேன்மைக்கும் தயா தேவியே காரணம் என்கிறார் –

இந்த உலகம் முழுமைக்கும் தாயாக உள்ளவளும்,
ஸ்ரீனிவாஸனின் கருணையே வடிவம் எடுத்தது போன்றவளும் ,
அவனிடத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உண்டாக ஞானம் என்னும் தாய்ப் பாலை அளிப்பவளும்,
ஸ்ரீனிவாஸனுக்கே சிறப்பை அளிப்பவளும் ஆகிய அலர் மேல் மங்கையை வணங்குகிறேன்.


                       அலமேலுமங்கையை…….


                                 பல்லவி

                   அலமேலுமங்கையை மனமாரத்துதித்தேன்

                   மலையப்பன் கோவிந்தன் தனை விட்டகலாத    

                               அனுபல்லவி

                   நிலவைப் பழிக்கும் அழகு முகமுடையவளை

                   குலம் கல்வி செல்வம் நல்வாழ்வளிப்பவளை

                                  சரணம்

                  உலகனைத்திற்கும் தாயாக இருப்பவளை

                   நலம் தரும் கேசவனின் கருணை மனையாளை

                   உளமுவந்து ஞானமெனும் தாய்ப்பாலையளிப்பவளை

                   மலர் நாபன் மார்பிலுறை பத்மாவதியென்னும்

                   











No comments:

Post a Comment