தர்மாம்பிகையின்……
பல்லவி
தர்மாம்பிகையை அறம் வளர்த்த நாயகியை
சர்வவேச்வரியை அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
சர்வலோகநாயகன் கேசவன் சோதரியை
சர்ப்பம்தனையணிந்த ஐயாரப்பன் துணைவியை
சரணம்
கர்மவினைப் பயனால் கட்டுண்ட என் பிணிதீர
வர்மம் வைத்திடாமல் காத்தருள வேண்டுமென
நிர்மலமான மனமுடைய ஈச்வரியின்
பொற்பதம் பணிந்து எனக்கருள வேண்டினேன்
No comments:
Post a Comment