தமரை மலரிதழ்….
பல்லவி
தாமரை மலரிதழ் போல் கண்களுடையவளே
மாமதுரை அரசாளும் தாயே மீனாக்ஷி
அனுபல்லவி
சோமசுந்தரரின் மனங்கவர் நாயகியே
நாமமாயிரம் கொண்ட கேசவன் சோதரி
சரணம்
பூமண்டலம் போற்றும் பர்வத குமாரி
மாமுனிவர் நரர்சுரர் வணங்கிடும் ஈச்வரி
தேமதுரத்தமிழால் உனைப்பாடித்துதித்தேன்
தாமதமின்றியே எனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment