காமாதி……
பல்லவி
காமாதி அறுபகையகன்றிட வேண்டியே
நாமங்களோதியே கரிமுகனைத் துதித்தேன்
அனுபல்லவி
பாமாலைகள் பல ஓதியே அனுதினம்
தூமகேதுவின் பதமலர் பணிந்தேன்
சரணம்
சாமானியர் சாது ஜனங்களும் கொண்டாடும்
கோமானை கணபதியை குகபெருமான் சோதரனை
ஆமருவியப்பன் கேசவன் மருகனை
பூமண்டலம் போற்றும் தேவாதி தேவனை
No comments:
Post a Comment