ஸைவ புரத்ரயம் சரீரத்யம் வ்யாப்ய பஹிரந்தரவபாஸயந்தீ தேசகால - வஸ்த்வந்த்ரா - ஸங்கான் - மஹா த்ரிபுரஸூந்தரீ வை ப்ரத்யக் சிதி : || 4 ||. - பஹ்வ்ருசோபநிஷத்.
அவளே மூன்று புரங்களையும், மூன்று சரீரங்களையும் வியாபித்துக் கொண்டு உள்ளும், புறமும் ஒளியைப் பரப்பிக்கொண்டு, தேசம், காலம், வஸ்து ஆகியவைகளால் பற்றப்படாமல்
" மஹாத்ரிபுரஸுந்தரி " எனப் பிரசித்தி பெற்ற ஞானவடிவாயிருப்பவள்.
மகாதிரிபுரசுந்தரி….
பல்லவி
மகா திரிபுர சுந்தரி — ஶ்ரீ
மகாதேவியே கேசவன் சோதரி
அனுபல்லவி
தகாதவனோ நான் உன்னருளைப் பெறவே
முகாரவிந்தம் காண்பித்தருள்வாய்
சரணம்
மகா தேவனெனும் சிவனும் நான்முகனும்
மகா விஷ்ணுவெனும் மூவரும் நீயே
சுகானுபவத்துடன் முப்புரமெரித்தவளே
மகா மாயே அனைத்தையுமாள்பவளே
No comments:
Post a Comment