ஹே பர்வதபுத்ரீ! சிவன் உன் பாதக்கமலங்களை நமஸ்கரித்த போது அந்த பாதத்தில் உள்ள பத்து நகங்கள் பத்து சந்திரர்கள் போலவும் சிவன் தலையில் உள்ள மதியும் சேர்ந்த போது
பரமசிவனானவர் ஏகாதச ருத்ரனாக ஜ்வலித்தார். என்று ஆசிரியர் விளக்குகிறார்.... இதுபோலவே,
தேவியின் பாத நகங்களின் ஔி கீழே உள்ள தரையில் பரவி நிற்கிறதாம்....நாம் அவளது திருவடிகளில் விழுந்து வழிபடுகிறோமே,அப்படி நாம் வணங்கும்போது தரையைத்தொடும் நமது தலைகளில் குடியிருக்கும் அறியாமை என்ற இருட்டு அகன்று மறைகின்றதாம்....
நமது அறியாமையை அகற்றத் தேவீக்கு தனி முயற்சி ஏதும் தேவையில்லை...அவளது பாத நக ஔி பட்டதும் தானே அறியாமை அகன்றுவிடுகின்றதாம்.ஔியிருக்கும் இடத்தில் அதனை எதிர்த்து நிற்க இருளால் இயலாதல்லவா!!!!!
இது தானே இருளின் பலவீனம்.... என்பதை உணர்த்தும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்லோகம்....
*நகதீதி திஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா |*
*பதத்வயப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா || 19*
மலையரசன் மகளே……
பல்லவி
மலையரசன் மகளே ஶ்ரீ லலிதாம்பிகையே
தலை வணங்கியுனைத் துதித்தேன் கேசவன் சோதரி
அனுபல்லவி
நிலவொளியெனத்திகழும் உன் பத நகங்களின்
ஒளியாலெம்மறியாமை எனுமிருளகன்றது
சரணம்
தலை வணங்கிய சிவன் சிரத்திலுன்
பளிச்சிட்ட அழகிய பத்து விரல் நகங்களும்
நிலவொளியாய்த் தெரிய அவரணிந்த நிலவுடனே
ஏகாதச ருத்திரராய் அவர் காட்சி தந்தார்
No comments:
Post a Comment