பூரணப் பொருளே….
பல்லவி
பூரணப் பொருளே அன்னபூரணியே
காரண காரியமனைத்தும் நீயே
துரிதம்
நாரதர் நான்முகன் நரர் சுரரிந்திரன்
நமச்சிவாயன் நாரணன் பணிந்திடும்
அனுபல்லவி
நாரணன் கேசவன் சோதரி மாயே
ஆரணப் பொருளே அனைத்துக்கும் முதலே
சரணம்
பூரணம் பொதிந்த மோதகக்கையனை
வாரண முகனை ஈன்றவளே தாயே
பாரனைத்தும் பணிந்தேத்தும் லலிதாம்பிகையே
நாரணியே துதித்தேன் நலமனைத்துமருள்வாய்
No comments:
Post a Comment