சரணம் சரணம்…..
பல்லவி
சரணம் சரணம் மூகாம்பிகே சரணம்
தருணமிதுவே எனையாண்டருளவே
் அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திடும்
பரமேச்வரி கௌரி கேசவன் சோதரி
சரணம்
அரனரி அயனும் தேவியர் மூவரும்
உடனிருந்தருளும் ஆதி சக்தியே
மரணம் பிறப்பெனும் மாயச்சுழலகல
வரம் தர வேண்டி உனையே துதித்தேன்
அரக்கன் மூகாசுரனை அழித்தவளே தேவி
ஆதி சங்கரருக்கு அருளளித்தவளே
கோலமா முனிவர் துதித்த ஈச்வரியே
கொல்லூர் திருத்தலத்தில் வந்தமர்ந்தவளே
No comments:
Post a Comment