லலிதாம்பிகை திருவடிகளில் பணிந்து அர்ச்சனை செய்தாலே சகலவிதமான தரித்திரங்களும் நீங்கும். மேலும் அன்னையை தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தாலே எல்லா பதவிகளும் கிடைக்கும்.
"முக்தி க்ஷேத்திரத்தில் வாசம் செய்யும் பவானியே ! உன் ஸ்ரீ பாதங்களைச் சரணடைந்ததால் பிரம்மா கமலத்தில் வீற்றிருக்கும் பிரம்ம பதவியை அடைந்தார். ஸ்ரீ கிருஷ்ணனும் உன் ஸ்ரீ பாத கமலங்களை மனதிற்குள் சதா தரிசனம் செய்து கொண்டு இருந்ததினால் கமலக் கண்களைப் பெற்றார். எந்த ஸ்ரீ பாத கமலங்களில் அர்ச்சனை செய்து ஸ்ரீ மகாலட்சுமியே தரித்திரத்தை விரட்டும் சக்தியை பெற்று இருக்கிறாளோ, அப்பேறு பெற்ற உன் ஸ்ரீ பாதங்களில் ஞானிகள் அர்ச்சனை செய்து, எல்லா தரித்திரங்களையும் விரட்டி சத்கதியை அடைகின்றனர். " என்று பாடுகிறார் பட்டதரி.
இது போலவே, சௌந்தர்ய லஹரியின் 4 வது ஸ்லோஹம் பாத கமலங்களின் நிகரற்ற சக்தியை விவரிக்கிறது....
த்வதந்ய: பாணிப்ப்யா: மபயவரதோ தைவதகண:த்வேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம்ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ. உலகிற்குப் புகலிடமே ! உனக்கு வேறான தேவக்கூட்டங்கள் கைகளால் அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாகக் காட்டுகிறர்கள். நீ ஒருத்தி மட்டும் அபிநயத்தால் வரத்தையும் அபயத்தையும் ப்ரகடனம் செய்பவளாக இருப்பதே இல்லை. ஏனென்றால் பயத்தினின்று காப்பாற்ற வேண்டியதற்கு அதிகமாகவே பலனை அளிப்பதற்கும்கூட உன்னுடைய திருவடிகள் திறமை உடையவைகள் அன்றோ ?
ஶ்ரீ பாதமே……
பல்லவி
ஶ்ரீ பாதமே துணை எனக்குனது
கோபாலக்ருஷ்ணன் கேசவன் சோதரி
அனுபல்லவி
பூபாலரும் போற்றும் லலிதாம்பிகையே
சோபனம் பாடியே உன் பதம் பணிந்தேன்
சரணம்
உன் பதம் பணிந்தே கமலாசனனும்
தன் பதவி பெற்று படைக்கும் தொழில் செய்தான்
உன் பொற் பதங்களை நினைந்தே கண்ணனும்
தன்னிரு கமலக் கண்களை பெற்றான்
பொன்கமலப் பதங்களை திருமகள் துதித்து
வறுமையை விரட்டும் சக்தியடைந்தது போல்
உன்னிரு திருவடியை அருச்சனை செய்து
அடியாரும் ஞானியரும் அந்நிலை பெற்றார்
கரங்களில் வரமும் அபயமும் அளிப்பதுபோல்
பரதெய்வங்கள் காட்டும் அபிநயமல்லாது
பரதேவி நீயுன் திருவடியருளால்
அனைத்து நலன்களும் அளிப்பவளன்றோ!
No comments:
Post a Comment