ஓர வஞ்சனை…….
பல்லவி
ஓர வஞ்சனை ஏனய்யா என்னிடம்
ஶ்ரீராமா உனையே அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
பாரினில் நீயே கண்கண்ட தெய்வமென
பாடித் திரிந்தேன் கேசவா மாதவா
சரணம்
காரிகையின் சாபம் தீர்த்தவனே
கோரிய சபரிக்கு மோட்சமளித்தவனே
போரிட்டு ராவணனை அழித்த ராகவனே
சூரிய குலத்துதித்த கோதண்டபாணியே
No comments:
Post a Comment