திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன்
திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தழ்வுறா
உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம்
குறைத விர்க்கும்கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
சிந்தையின்கண் அஞ்சும் இயல்பு நீங்குமாறு யானை முகத்தோடு விளங்கும் சித்தி விநாயகனென்னும் வள்ளற் பெருமானே, செல்வமும் கல்வியும் சீரும் சிறப்பும் நின்னுடைய திருவடியே புகழ்ந்து பாடும் திறமையும், நல்ல உடம்பும் ஒழுக்கமும் உள்ளத்தில் ஊக்கமும் குற்றப்படாத உணர்வும் தந்து எளிய என் மனத்தின்கண் எழுந்தருளியவனே, நின்பால் அன்புடையார்க்கு உண்டாகும் குறைகளைப் போக்கியருளும் பெரிய குணக் குன்றமாகியவனே, எனக்கு அருள் புரிக. எ.று. இதனால், விநாயகப் பெருமான் அன்பர் சிந்தைக்கண் அமர்ந்து அச்ச வுணர்வு தோன்றாது கெடுமாறு அருளும் திறம் தெரிவித்தவாறாம்.
சித்தி விநாயகனே……
பல்லவி
சித்திவிநாயகனே ஆனை முகத்தோனே
வித்தகனே உந்தன் கழலடி சரணம்
அனுபல்லவி
மத்தள வயிற்றானே கேசவன் மருகனே
புத்தியிலுறைபவனே குருவே தெய்வமே
சரணம்
செல்வமும் கல்வியும் கீர்த்தியும் நல்வாழ்வும்
நோயற்ற உடலும் ஒழுக்கமும் தந்தெனது
உள்ளத்திலமர்ந்தவனே அனைத்துமறிந்தவனே
உனைப்போற்றிப் பாடும் ஆற்றல் தருவாயென
No comments:
Post a Comment