பூந்தார் குழல் வில் புருவம், தளிர்போல்
ஆந்தே கம்மிளிர் அணியார் இருவர்
சார்ந்தே விளங்கும் தனிமா முதலே!
தேர்ந்தே தொழுதேன் சிறியேற்(கு) அருளே!
பொழிப்புரை: மாலையை அணிந்த கூந்தலையும், வில் போன்ற புருவங்களையும், வில் போன்ற புருவங்களையும், இளந்தளிர் போன்ற உடலினையும் பெற்றிருக்கும் சித்தி, புத்தி என்ற தேவிமார் இருவரையும் பெற்று எழுந்தருளியிருக்கும் ஒப்பில்லாத முதல்வனே! உன்னைத் தொழுதேன். சிறியவனாகிய எனக்கும் அருள் செய்வாயாக.
வலம்புரி கணபதியே….
பல்லவி
வலம்புரி கணபதியே ஒப்பிலா முதல்வனே
நலம் தருவாயென வேண்டி உனையேதுதித்தேன்
அனுபல்லவி
மலைமகள் மைந்தனே கேசவன் மருகனே
நிலையிலா இவ்வுலகில் நிலைத்திருப்பவனே
சரணம்
மலர் மாலைகள் அணிந்த அழகிய கூந்தலுடன்
இளந்தளிர் மேனியும் வில் போன்ற புருவமும்
களையான முகமும் சேர்ந்து விளங்கும்
சித்தி புத்தியுடன் காட்சி அளித்திடும்
No comments:
Post a Comment