Monday, 28 June 2021

சாம்ப சதாசிவன்…….

உன் பாதங்கள் சிவந்ததின்முதல் காரணம் பாம்பின் மூச்சுக்காற்று (சிவன் கழுத்திலிருந்த)

காரணமாக அல்லது அகங்காரமாகப் பேசிய பிரம்மாவின் ஐந்தாவது தலையினை பரமன் கையினால்

கிள்ளி கபாலி என்று பெயர் பெற்றார் அந்தக் கபாலம் முட்டியதாலோ ? ஸ்ரீ வித்யா ஸ்வரூபிணியான உன் பாதம் 

மாயையில் தத்தளிக்கும் மனிதருக்கு  உன் பாதம் தவிர ஏது கதி என்று பொருள்.சிவனார் ஜோதியாக நின்ற போது  பிரமனும் மாலும் அவரின் 

அடியையும் முடியையும் காண விரைய வராக உருவத்தில் மண்ணைத் தோண்டி தேடிய மால் விருப்பம் நிறைவேறாது 

திரும்பினார். பிரமன் முடியைக் கண்டதாக சொன்ன பொய்க்கு

தாழம்பூ பொய் சாட்சி சொல்ல சிவன் கொய்த 5 வது தலைதான் கபாலம்.  அதைக் கையிலேந்தியவர் கபாலி. அது பட்டுத்தான் உன் பாதம் சிவந்தது.எனவும் பொருள் கொள்ளலாம்.   

என்கிறார் பட்டத்ரிகள்....    மேலும்,ஸெந்தர்ய லஹரியில்.....

தேவீயினுடைய கைகள் ஸ்வர்ணலதைகளைப் போல ஸௌந்தர்யத்துடனும் தாமரைக் கொடிகள் போல் மார்தவத்துடனும் விளங்கி வருகின்றன.பராசக்தியானவள் 4 கைகளையுடையஸௌந்தர்யத்தையும்,ப்ரும்மாவானவர் தன்னுடைய 4 முகங்களால் ஒரே காலத்தில் வர்ணிக்கிறார்.

இவ்விதம் ப்ரும்மாதேவீயினுடைய 4 கைகளை வர்ணிப்பதற்கு மேற்சொன்ன அடி முடி வரலாறுபடி பொய் சொன்ன முகத்தோடு சதுர்முகங்களையும் கிள்ளிவிடவேண்டும் என்று

பரமசிவன் யத்னம் செய்த காலத்தில் தேவீயானவள் ப்ரும்மாவிடம் கருணைபுரிந்து தன் 4 கைகளால் ப்ரும்மாவினுடைய 4 முகங்களுக்கும் அபயதானம் செய்து பரமசிவனால் கிள்ளமுடியாமல் ரட்ஷித்தாள்.அதற்காக ப்ரம்மாவானவர் எப்போதும் தேவீயைப் பார்த்து தாயே!உன்னுடைய 4 கைகளால் என்னுடைய 4 முகங்களுக்கும் அபயதானம் செய்து பரமசிவனுடைய நகத்தால் கிள்ளப்படாமலிருக்கும்படி ரட்ஷிக்கவேண்டும் என்ற ப்ரார்த்தனையுடன் தேவீயினுடைய கைகளின் ஸௌந்தர்யத்தை ப்ரும்மா வர்ணிக்கின்றார்....இதனால்,எந்தவிதமான  சிவாபராதத்திலிருந்தும் தேவீயினுடைய க்ருபையால் மீண்டு கொள்ளலாம் என்று  ஸ்ரீ ஆதிசங்கர  பகவத்பாதாள் தேவியை வர்ணிக்கிறார்....


                                                       சாம்ப சதாசிவன்…….


                                                               பல்லவி

                                               சாம்ப சதாசிவன் துணைவியே ஶ்ரீலலிதே

                                               வித்யா ரூபிணி கேசவன் சோதரி

                                                             அனுபல்லவி

                                               பாம்பின் மூச்சு பட்டுன் பாதம் சிவந்ததோ

                                               பிரம காபலம் பட்டதினால் சிவந்ததோ

                                                                 சரணம்

                                               தன் தலையொன்றை சிவன் கொய்ததனால்

                                               உன்னிடம் சரணடைந்த நான்முகன் சிரங்களை

                                               நான்கு கரங்களால் அபயம்  தந்தவுன்

                                               கரங்களைக் கமலமலர்க் கொடியெனப் புகழ்ந்தான்

                                                                                               

                                               

No comments:

Post a Comment