சூர்ய சந்த்ரர்கள்,ப்ரம்மா,விஷ்ணு,இந்த்ரன் போன்ற எல்லா தேவர்களையும் தன் வீரத்தால் வென்று அவர்களது ஸ்தானங்களைப் பறித்து மஹிஷாஸூரன் துன்புறுத்திய போது அவர்கள் உன்னிடம் சரணடைந்து துதிக்க, அம்மா! அப்பேற்பட்ட மஹிஷனை நீ உனது காலால் மிதித்து கொன்று தேவர்களுக்கு அபயம் அளித்தாய்...உனது அருமை பெருமைகளை என்னால் எப்படி எடுத்துரைக்க இயலும் தாயே! என்கிறார்....
ஆக நாம் அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன் என்று அவளை ப்ரார்த்தனை செய்வோம்....
புகலென உனதிரு…..
பல்லவி
புகலென உனதிரு பதமலர் பணிந்தேன்
ஜகம் புகழ் ஈச்வரியே கேசவன் சோதரி
அனுபல்லவி
மிக மிக மகிழ்வுடன் ஜெய கோஷம் செய்து
அகம் குளிர்வதன்றி வேறென் செய்கேன்
சரணம்
சகல தேவர்களும் திங்களும் பானுவும்
மகா விஷ்ணுவும் தேவேந்திரனும்
மகிடனிடம் தோற்று அடைக்கலமடைந்ததும்
மகிடனை மாய்த்தவளே மலையரசன் மகளே
No comments:
Post a Comment