Friday, 18 June 2021

ஏதமிலாளே….

ஹே! தேவி! பரமசிவன் தங்கள் பாதங்களை நமஸ்கரிக்கும் போது  தாங்கள் கோபித்து கால்களால் அவர் சிரஸிலடிக்க அப்போது அவர் தங்களைப் பார்த்து " இப்படி மிதிக்கிறாயே, நான் என்ன மகிஷாஸுரனா" என்று கேட்டார்.  இதைக் கேட்ட தங்கள் தோழிகள் தயனீயமாகப் புன் சிரிக்கவே தேவியானவள் மீண்டும் கோபம் அடைந்து அவரை மிதிக்க சிவனார்மிகவும் குதூகலம் அடைகிறார். என்று பாடுகிறார் பட்டத்ரி....

இங்கே  நாம்பூர்ணமான ஸ்வரூப வர்ணனைக் கிரமம் என்று எடுத்துக் கொள்ளாதபோது எந்தத் தெய்வமானாலும் முதலில் அதன் பாதத்தைப் பிடிக்கத்தான் போக வேண்டும். சரணாகதி என்று விழுவது பாதத்தில்தான்.  ஆக பக்தனின் சிரஸில் பாதத்தை வைத்துத்தான் குரு ரூபமாக தெய்வம் தீக்ஷைகொடுப்பதும். அம்பாள் அம்மாவுக்கு அம்மா; குருவுக்கு குரு. அதனால் ”அம்மா!” என்று அவள் காலைக் கட்டிக் கொள்வதானாலும் சரி, குரு என்று தீக்ஷை கேட்டாலும் சரி பாதத்தைத்தான் பிடிக்கணும். ஆகையால் [ஸ்தோத்திரத்தை] இப்படி.

இன்னொன்றுகூட. சிவன் சக்தியுக்தன் என்றால் சக்தியும் சிவயுக்தைதான். அவர்கள் அர்த்தநாரீச்வரர்களாக இருப்பதால் சிவனைப் பற்றிக் கேசாதிபாத வர்ணனையும் பண்ண நியாயமுண்டென்று அப்படி ஒரு ஸ்துதி ஆசார்யாள் செய்திருக்கிறார். அதே நியாயத்தில் அம்பாளைப் பாதாதிகேசமாகக்கூட வர்ணிக்கலாம்தானே.

லலிதாம்பிகையின் ஸ்ரீ பாதங்களை சரண் அடைவோம் !அவள் தாயாய்,தந்தையாய்,குருவாய் நம்மை வழிநடத்துவாள்.....


                                                  ஏதமிலாளே….


                                                        பல்லவி

                                            ஏதமிலாளே உன் பாதங்களே கதி

                                            பாதி மதியணிந்த ஶ்ரீலலிதாம்பிகையே

                                                       அனுபல்லவி

                                            ஆதி சக்தியே கேசவன் சோதரி

                                            மேதினியோர் போற்றும் அன்னையும் நீயே

                                                            சரணம்

                                            பாதம் பணிந்த சிவன் தலை மீது

                                            மோதிய உன் பதம் பார்த்தவர் கேட்டார்

                                            மகிடன் நானோ, சிரித்தனர் தோழியர்,

                                            கோபித்திடித்த உன் பதம் கண்டு நகைத்தார்


                                             பூதலம் கொண்டாடும் மாதா சக்தியும்

                                             நாதன் சிவனும் ஒன்றென உணர்ந்தேன்

                                             மாதொருபாகனாய் காட்சியளித்திடும்

                                             மாதே பராசக்தி உனையே துதித்தேன்

                                             

                                             

          

No comments:

Post a Comment