Monday, 14 June 2021

பாதகமலங்களை….

 *அம்பாள் ஸ்ரீ லலிதா தேவியின் திருவடிகளே சரணம் - 3*

அன்னையின் திருவடிகள் எங்கு இருக்கின்றன என்பதை பட்டத்திரி அழகாக வர்ணித்து உள்ளார். அதாவது, "மங்களாம்பிகையே ! உனது ஸ்ரீபாத கமலங்கள் எங்கு இருக்கின்றன ? வேதங்களுடைய சிரஸாகிற உபநிஷத்துக்களிலா ? அல்லது தத்வ ஆராய்ச்சியில் மனதைப் பறி கொடுத்த யோகிகள் ஹ்ருதய கமலங்களிலா ? அல்லது மன்மதனை சாம்பலாக்கிட ஸ்ரீபரமேஸ்வரன் பிரணய கலகத்தின் போது, உன் ஸ்ரீபாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது அந்த ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சிரஸின் மீதா ? அல்லது மகாபயங்கரமான மகிஷாசுரனுடைய வெட்டப்பட்ட சிரஸின் மீதா ? " என்று பாடுகிறார்.

மேலும் அம்பாளின் பெருமையைச் சொல்லும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில்,,,,*

*நக தீதிதி ஸ்ஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா !*

பதத்வய  ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா !!*

அம்பாளுடைய பாதத்தில் எல்லோரும் வந்து வணங்குகிறார்கள். யார் யார் வந்து வணங்கினார்கள்?  தேவேந்திரன், மும்மூர்த்திகள், தேவாதி தேவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் வந்து வணங்கினார்கள். அப்படி வண்ங்கியவர்களில் சிலருக்கு தமோ குணம் இருந்ததாம். அந்த குணங்கள் எல்லாம் அம்பாளின் கால்களில் உள்ள பத்து விரல் நகங்களிலிருந்து வந்த பிரகாசமான ஒளியின் தன்மையால் நீக்கப்பட்டு விட்டன.

இதைத்தான் அபிராமி பட்டரும் 

மனிதரும் தேவரும்,மாயா முனிவரும்,

வந்து சென்னி குனிதரும் கோமளமே 

கமலாலயனும் மதியுறுவேணி

 மகிழ்நனும் 

மாலும் வணங்கி என்றும் துதியுறு 

சேவடியாய்என்கிறார்.அப்படிப்பட்ட பாதங்களை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள்.எனினும் அது பொருந்தாது.ஏனெனில் தாமரையின் குணம் பகலில் மலர்ந்து இரவிலோ அல்லது பனிமிகுதியாலோ கூம்பி விடும்.ஆனால் உனக்கு பிறந்த வீடோ ஹிமவான் புத்ரி இமயமலை. புகுந்த இடமோ கைலாச மலை. இரண்டும் சதா சர்வகாலமும் பனியிலேயே உறைந்து கிடக்கும் இடம். அப்படியிருந்தும் உன்பாதத் தாமரைகள் கூம்புவதே இல்லை, வாடுவதும் இல்லை

நின் புது மலர்த்தாள் பகலும் தொழுவார்க்கே

நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே”

என்கிறார் அபிராமி     

                                                      பாதகமலங்களை….

                                                                  பல்லவி

                                               பாதகமலங்களைப்  பணிந்தேன் தேவி

                                               ஓதக்கடல் துயிலும் கேசவன் சோதரியுன்

                                                             அனுபல்லவி

                                               யாதுமாகி நின்ற ஶ்ரீ லலிதாம்பிகையே

                                               பூதலம் புகழ்ந்தேத்தும் திரிபுரசுந்தரியே

                                                                   சரணம்

                                               வேதமோதுவோர் இதயகமலத்திலா

                                               வேதோபநிடதங்கள் போற்றும் பொருளிலா

                                               மாதொரு பாகன் மதனை எரித்த சிவன்

                                               தீதின்றிப் பணிந்த சிரசிலா என எண்ணி ….( பாத…)

                                               பாதம் பணிந்த தேவரும் மூவரும்

                                               சாதித்தப் புண்ணியரும் தேவேந்திரனுமுன்

                                               பாத நகங்களின் பளிச்சிடுமொளியால்

                                               பாதிக்கும் தமது குறைகளைக் களைந்தனர்…( பாத….)                         

                                                          

No comments:

Post a Comment