பொற்காசு…….
பல்லவி
பொற்காசு மாலையணிந்தவளே கற்பகமே
நற்கதி பெறவே உன் பதம் பணிந்தேன்
துரிதம்
அரனயனரியும் நந்தியும் கணங்களும்
சரவணன் கணபதி கரம் பணிந்தேத்தும்
தற்பரன் கபாலீசன் மனங்கவர் ஈச்வரியே
விற்பன்னர் போற்றும் கேசவன் சோதரியே
சரணம்
கற்பனைக் கெட்டாத மந்திரப் பொருளே
சொற்களால் வர்ணிக்க முடியாத பேரழகே
அற்புதமே அடியார் அனுதினம் வணங்கிடும்
பொற்பதமுடையவளே திருமயிலை நாயகியே
No comments:
Post a Comment