சிவபெருமான் உன் காலடியில் விழுந்து வணங்கும் போது உன் பாதங்கள் பட்டதால் கங்கையின் நிறம் சிவக்கிறது அவர் தலை உன் காலில் படும் போது உனக்கு உண்டாகும் மகிழ்ச்சியினைப் பார்க்க சிவன் தலையை உயர்த்து கையில் கங்கையின் நீர்த்துளிகள் குங்குமம் கலந்த நீர் போலச் சிவந்து ரத்தம் போல ஜ்வலிக்கிறது .காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறதோ என்ற கவலையால் அவர் உன்னை காணும்போது அவரது(பரமசிவனின்) அன்பும் வெளிப்படுகின்றது.
பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மகுட-நீராஜித-பதாம்
பவானி என்ற பெயருடையவளும் பரமசிவனின் பத்தினியுமான தேவியே! உன் அடிமையாகிய என்னை கருணையுடன் கூடிய உன் கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று கேட்க நினைக்கும் ஒருவன், பவானி! நீ என்று சொல்லத் தொடங்கி, முடிக்கும் முன்பே, அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது மேலான ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய். மேலும் ஜகன்மாதா கருணையின் வைபவத்தை யாருமே வர்ணிக்கமுடியாது.தேவியினுடைய ஸந்நிதி சென்று,ரொம்பவும் மூடனான நாம் "தாயே நான் உன்னுடைய அடிமை என்னிடத்தில் நீ கருணா த்ருஷ்டியைச் செலுத்தி என்னை ரட்ஷிக்க வேண்டும்" என்று ஸ்தோத்ரம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கவேண்டும்.....
தேவி பவானி…..
பல்லவி
தேவி பவானி உன் திருவடி பணிந்தேன்
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
அனுபல்லவி
பாவியென் பழவினைப் பயன் தொலைய வேண்டியே
தேவர் முனிவர் பணி கேசவன் சோதரி
சரணம்
மாவிடைவாகனனுன் கழல் பணியும் போதுன்
சிவந்த கழல்கள் கங்கையின் சிரசில் பட்டு
செந்நிற உதிரமெனத் தோன்றுவதைக் கண்டு
சிவபெருமான் கவலையுற்றுக்கனிவுடனே பார்த்தார்
பவானி என்றழைத்துன் அடியாருனைப் பணியுமுன்னே
அயனரி இந்திரனணிந்த மகுடங்கள்
பணிந்த உன் பதமலர் தரிசனம் தந்தவர்க்கு
அருள் தரும் உன் கருணை அழகை என் சொல்வேன்
No comments:
Post a Comment