ஏகம் அநேகம்!!
நல்லதும் தீயதும் வாழ்வின் இருபுறம்
பூவும் தலையும் காசின் இருபுறம்
இருட்டும் வெளிச்சமும் ஒளியின் இருபக்கம்
அகமும் புறமும் மனதின் இருபக்கம்
உள்ளும் வெளியும் கதவினிருபக்கம்
கருமையும் வெண்மையும் காட்சியின் இருபுறம்
நஞ்சும் அமுதும் உணவின் இருபயன்
சிறிதும் பெரிதும் பொருளின் இருநிலை
வெற்றியும் தோல்வியும் மனத்தின் இருநிலை
இன்பமும் துன்பமும் உள்ளத்தின் இருநிலை
உள்ளதுமில்லாததும் மாயையின் திரிபு
No comments:
Post a Comment