தேவீ,உன் பாத கமலங்களை பூஜிக்கும் ப்ரம்மாவிற்கு தன் இருப்பிடம் நஷ்டப்பட்டு விடுமோ
என்ற விசாரம்.நாராயணணுக்கோ தன் பத்னியான லட்சுமியின் வாசஸ்தலம் பறிக்கப்பட்டு விடுமோ?அவள் வசிக்க இடமின்றி தவிப்பாளோ? அதுவன்றி அவளது கையில் இருக்கும் தாமரை விட்டு சென்றுவிடுமோ? என்று தோன்றுவதால் தான் உனது பாதங்களை ஸ்மரணை செய்கின்றனர்....
ஆனால் உனது பாதக் கமலங்கள் ப்ரம்மாவையும்,நாராயணணையும் பகையின்றி ரட்சித்து அவர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கிறது என்று நாராயண பட்டத்ரி பாடியுள்ளார்.....
நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |
நிர்குணா நிஷ்கலா ஶாந்தா நிஷ்காமா நிருபப்லவா ||
பற்று இல்லாதவளே அப்பழுக்கற்றவளே,நிலையாக இருப்பவளே,உருவமில்லாதவளே,கலக்கமான மனதுடையவர்களால் அடையமுடியாதவளே,மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவளே,பிரிக்கமுடியாதவளே,அமைதி தவளும் திருமுகத்துடன் காட்சிதருபவளே,விருப்பம் இல்லாதவளே,அழிவற்று விளங்குபவளே....
என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையின் பெருமைகளை கூறியுள்ளது...
ஆக ப்ரம்மா,விஷ்ணு,ருத்ரன் அனைவரும் அன்னையின் பாத கமலங்களை சரணடைந்துள்ளனர்..
நாமும் கள்ளம் கபடமற்று அன்னையின் பாதங்களை சரணடைவோம்......
களங்கமில்லாதவளே…….
பல்லவி
களங்கமில்லாதவளே ஶ்ரீ லலிதாம்பிகையே
உளமாற உனதிரு பதங்களையே துதித்தேன்
அனுபல்லவி
அளவிலாத கருணையளித்திடும்
பளிங்கு மனமுடைய கேசவன் சோதரி
சரணம்
தளிரிதழ்த் தாமரை மலரமர் பிரமன் தன்
படைப்புத்தொழில் நடத்த உனையே பணிந்தான்
இளந்தாமரை மலரை வைத்திருக்கும் மாலனோ
திருமகள் தன்னுடனிருக்க உனையே வணங்கினான்
பற்றற்றவளே உருவமில்லாதவளே
கலங்கிய மனமுடையோர் காண முடியாதவளே
அப்பழுக்கற்றவளே அழிவில்லாதவளே
விருப்பு வெறுப்பு சலனமில்லாதவளே
No comments:
Post a Comment