அபயாம்பிகையின்…..
பல்லவி
அபயாம்பிகையின் மலர்ப்பதம் பணிந்தேன்
அபயகரம் காட்டி அடியார்க்கருள் தரும்
அனுபல்லவி
சுப பலன்களை பணிபவர்க்களித்திடும்
அபார கருணை கொண்ட அன்னை பரமேச்வரி
சரணம்
சபாபதியெனும் மயூரநாதரின்
மனங்கவரீச்வரி கேசவன் சோதரி
முன்னம் செய்த வினப்பயன் தொலையவும்
இன்னமும் பிறவா வரம் பெற வேண்டியும்
No comments:
Post a Comment