பரமசிவனுக்கும் அம்பாளுக்கும்
ஊடல் வரும் போது சிவன் மன்னிப்பு கேட்கும் விதமாக தேவியின் காலில் விழுவாராம் அப்போது அவர் தலையில் உள்ள கங்கையில் தேவியின் கால்பட்டு கங்கையின் மேல் தாமரை பூத்தது போன்று தோற்றமளிக்கிறது . மேலும்
அவரது ஜடாமுடியில் தேவியின்
கால் விரல்கள் படும் போது சின்ன தாமரை மொட்டுக்கள் போன்று விளங்குகிறது. சம்புவின் சந்த்ரகலையின் நிறமோ தேவியின் சிவந்த பாதங்களின் சோபையில்உதிக்கும் வெண்ணிலாவாக விளங்குகிறது என்று வர்ணனை செய்கிறார்....
தாக சாந்திக்கு மூகர் எதைத் தேடிக்கொண்டார்? ‘அம்மா காமாக்ஷி! பரமசிவ ஜாயே – மகா மங்களமான பேரன்பு வடிவான ஈசுவரனுடன் இரண்டறக் கலந்திருக்கும் தாயே! சம்ஸார தாபத்தில் கொதித்திருக்கிற நான் உன் மகா குளிர்ச்சியான திருவடி நிழலைத்தான் தேடுகிறேன் அம்மா” என்கிறார். ‘பதாம்போஜச் சாயாம்’ – ‘இணையடிக் கமலங்களின் நிழலை’ என்று நேர் அர்த்தம்.
பாத கமலமே….
பல்லவி
பாத கமலமே என்றும் எந்தன் துணை
மாதே ஶ்ரீ லலிதே கேசவன் சோதரி
அனுபல்லவி
வேதனை வெம்மை தரும் சம்சாரத் துயரகல
நாதனுடன் மகிழ்ந்திருக்கும் சீதமிகு உன்னிரு
சரணம்
ஊடல் வசப்பட்டு மன்னிப்புக் கோர வரும்
ஆடவல்லான் தலைமீதுன் திருப்பாதம் பட்டதுமே
மடவரல் தலை மீது கமல மலர் பூத்ததோ
சடையில் செம்பதவிரல்கள் நிலவொளியாய் ஜொலித்ததோ
No comments:
Post a Comment