ஶ்ரீ பஞ்சாக்ஷர புஜங்கம்
நமஸ்யேகிரீச ஸ்வயம்ஜோதிராத்மன
கைலாஸவாஸின் பவபீதிசாந்த,
த்வாமேவயாசே (அ) த்ய பக்திம்ப்ரதேஹிமே
மாம்ரக்ஷதேவேச சம்போதயாநிதே
ஹே கிரீசா! நீங்கள் ஜ்யோதிஸ்வரூபமாக இருந்து ஜீவ ரக்ஷணம்செய்ய கைலாசத்தில் வசித்து மக்களின் பயத்தை அடக்கும் சிவமே!உங்களை வேண்டுகிறேன்! சம்போ! தயாநிதியே, தேவேச, எனக்குப் பக்தியைக்கொடுங்கள். என்னை ரக்ஷித்தருள வேணும்
மஹாதேவமூர்த்தே மஹேசானசம்போ
மஹாபாக்யதாயின் மஹாமேருவாஸின்,
மஹாவாக்யகுப்த மஹாதேஹரூப
மஹத்பி: ஸ்துதஸ்த்வம் மாம்ரக்ஷசாத்ய.
மஹாதேவனே, மஹேசான சம்போ, மஹா பாக்யத்தையளிப்பவனே,மஹாமேருவில் வஸிப்பவனே, மஹா வாக்யங்களில் மறைந்திருக்கும்ரூபமுடைய சம்போ! மஹான்கள் உங்களைத் துதிசெய்கிறார்கள்(அப்படிப்பட்ட நீர்) என்னை இப்பொழுதே ரக்ஷித்தருள்வீராக.
சிவம்தேவதேவம் ம்ருடம்ஸர்வசாந்தம்
பவம்பாவகம்யம் ப்ரபும்தாந்தமூர்த்திம்
நமஸ்யேஸதாபக்தி பூர்வம்கிரீசம்
சிவாதன்யதைவம் நஜானேநஜானே
சிவன், தேதேவன், ம்ருடன், ஸர்வசாந்தன், பவன் தியானத்தினால்அடையத்தகுந்தவர், அடக்கமானவர், கிரீசர் என்ற பெயர்களைச் சொல்லிஎப்பொழுதும் பக்தி பூர்வமாக நமஸ்கரிப்பேன். சிவனைத் தவிர வேறுதெய்வம் தெரியாது, தெரியாது.
வாம்வக்ரதுண்டம் ஸுதம்ஜாதமாத்ரே
வைபுத்ரம்ஸ்வயம்ப்ரீதி பூர்வம்ப்ரக்ருண்ணன்,
அங்கேநிதாயா (அ ஸ்ய மூர்த்னிஸ்வஜிக்ரன்
ஸோமாகணேசேதி பக்தைஸ்ஸ்துதஸ்த்வம்
. யானைமுகமுடைய புத்திரனைப் பெற்றவுடன் ப்ரீதியுடன் தன் மடியில்வைத்து உச்சி முகந்து ஸந்தோஷப்படும் பரமேச்வரனை ‘ஸோமாகணேசன்’என்று பக்தர்கள் ஸ்துதி செய்வார்கள்
யமிச்சன் வையம்தேஜ புஞ்ஜாபிராமம்
பரம்ப்ரம்மூர்த்திமம் ஸ்வபாஸாலஸந்தம்,
நமச்சிவாயேதி மனும்ரூபவந்தம்
ஸதாபாவயேஹ்ருத் ஸரோஜேகிரீசம்
ஸ்வயமாக (கோடிஸூர்யன் போல) ஜ்யோதிர் மண்டலமாக விளங்கும்பரப்ரும்மமாயும், தன் ஒளியினால் தானாகப் பிரகாசிக்கும் சிவ மூர்த்தியும், ‘நமச்சிவாய’ என்னும் மந்திரத்தின் உருவமானவருமான கிரீசனானசிவபெருமானை எப்போதும் என் உள்ளத்தாமரையில் வைத்திருப்பேன்.
என் மனத்தாமரையில்…….
பல்லவி
என் மனத்தாமரையில் என்றும் வீற்றிருக்கும்
பன்னகாபரணனே உனையே துதித்தேன்
அனுபல்லவி
உன்னருள் வேண்டியே உன் பதம் பணிந்தேன்
சென்ன கேசவன் நேசனே ஈசனே
சரணம்
மன்மதனை எரித்தவனே கயிலாயவாசனே
மன்னுபுகழ் மலைமகளை மணம் புரிந்த சிவனே
சோதி வடிவானவனே சுடரே சிவமே
இன்னருள் தந்தெம்மை ஆண்டருள்வாயே
மகா மேருவில் அமர்ந்திருப்பவனே
மகா வாக்கியப் பொருளானவனே
மகான்கள் துதிக்கும் மந்திரப் பொருளே
மகா தேவனே எமைக் காத்தருள்வாய்
நமச்சிவாயனே தேவாதிதேவனே
உமா மகேச்வரனே உமையொருபாகனே
நமஸ்கரித்துனையே தினமும் பணிந்தேன்
உனையன்றி வேறோர் தெய்வமறிந்திலேன்
ஐங்கரனை கரிமுனை கணபதியை தன் மகனை
பொங்கும் ஆசையுடன் மடி வைத்துக் கொஞ்சிடும்
சங்கரனை ஈச்வரனை கங்காதரனை
சோமாகணேசனென போற்றிப்பணிந்தேன்
ஒரு கோடி சூரியனின் ஒளியையும் மிஞ்சும்
பெருமைக்குரிய மாசிலா மணியை
நமச்சிவாய எனும் மந்திரத்தின் உட்பொருளை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வீழ்ந்து வணங்கினேன்
No comments:
Post a Comment