கற்பனைக்கெட்டாத…..
பல்லவி
கற்பனைக் கெட்டாத பேரழகே ராமா
அற்புத சிற்பமாய் நிற்குமுனைத் துதித்தேன்
அனுபல்லவி
விற்கலையில் வல்லவனே வீர ராகவனே
கற்பக தருவென அருள்தரும் கேசவனே
சரணம்
சிற்பரன் சிவன் போற்றும் திருநாமமுடையவனே
கற்புக்கரசி ஜானகியை மணந்தவனே
பற்பல பெயருடைய அனந்தராமனே
நற்கதி பெறவே பொற்பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment