மாதங்கி…..
பல்லவி
மாதங்கி நீயே மனங்கனிந்தருள்வாயே
வேதங்கள் போற்றும் மாதே மரகதமே ( ராஜ )
துரிதம்
பூதகணங்கள் நந்தி நான்முகன்
மோதகக்கையன் முத்துக்குமரன்
சுரபதி ரதிபதி சரச்வதியின் பதி
பசுபதி ஶ்ரீபதி அனைவரும் வணங்கிடு்ம்
அனுபல்லவி
கீத வாத்திய இன்னிசை ஒலிகளின் (சங் )
நாதமே நால்வகைக் கலைகளும் நீயே
சரணம்
நூதனமானவளே பாதி மதியணிந்தவளே
ஓதக் கடல் துயிலும் கேசவன் சோதரியே
நாதன் பரமசிவனிடம் கொண்ட நாயகியே
ஆதியே அந்தமே சோதி வடிவானவளே
கதம்ப வனந்தனில் வீற்றிருப்பவளே
இதந்தரும் சாமகானத்தை ரசிப்பவளே
மதனை எரித்தவரின் மனங்கவர் மங்கையே
மதங்கரின் மகளே உன் பதகமலம் பணிந்தேன்
No comments:
Post a Comment